- சென்னை
- பெருநகர போக்குவரத்து காவல்துறை
- சென்னை பெருநகர போக்குவரத்து போலீஸ்
- பழைய வாஷர்மன்பெட் சாலை
- போக்குவரத்து காவலர்
- சென்னை பெருநகர மாநகராட்சி
- தின மலர்
சென்னை: சென்னையில் மழைநீர் வடிகால் பணி காரணமாக பழைய வண்ணாரப்பேட்டை சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து போக்குவரத்துக் காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது; சென்னை பெருநகர மாநகராட்சி சார்பாக பழைய வண்ணாரப்பேட்டை சர் தியாகராய கல்லூரி முதல் டி.எச்.சாலை, கல்லறை சாலை சந்திப்பு வரை மழை நீர் வடிக்கால்களை சீரமைக்கும் பணி நடைபெற இருப்பதால், மேற்படி சாலையில் 07.07.2025 இன்று முதல் போக்குவரத்து மாற்றமானது செயல்படுத்தப்பட உள்ளது.
மின்ட் பகுதியிலிருந்து வரும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் டி.எச். சாலை, கல்லறை சாலை சந்திப்பில் திருப்பி விடப்பட்டு கல்லறை சாலை, எம்.எஸ் கோயில் தெரு, எஸ்.என். சாலை மற்றும் ஜீவரத்தினம் சாலை வழியாக டி.எச்.சாலை அப்போலோ மருத்துவமனை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம். மின்ட் பகுதியில் இருந்து வரும் இருசக்கர மற்றும் இலகுரக வாகனங்கள் வழக்கம்போல் டி.எச். சாலையை நோக்கி சென்று டி.எச். சாலை அப்போலோவை அடையலாம். டி.எச்.சாலை அப்போலோ மருத்துவனை சந்திப்பில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் டி.எச். சாலை நோக்கிச் சென்று வழக்கமான பாதையில் சென்று மின்ட் சந்திப்பை அடையலாம். அனைத்து வாகன ஓட்டிகளும் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post மழைநீர் வடிகால் பணி; சென்னையில் போக்குவரத்து மாற்றம்: மாநகர போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.
