×

அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான மனுக்களின் விசாரணைக்கு காலக்கெடு நிர்ணயிக்க வேண்டாம்: உயர் நீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம் கோரிக்கை

சென்னை: அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்ந்தெடுத்ததை எதிர்த்து தொடரப்பட்ட உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை கட்சிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க கூடாது என்று கோரி தேர்தல் ஆணையத்திற்கு எடப்பாடி பழனிசாமியின் எதிர் தரப்பினர் புகார் மனுக்களை கொடுத்தனர். இந்த மனுக்களை தேர்தல் ஆணையம் விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், உள்கட்சி விவகாரம் குறித்து விசாரிக்க அதிகார வரம்பு உள்ளதா என்று ஆரம்பகட்ட விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தது.

இதில்தேர்தல் ஆணையம் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்றும் அதனால், ஆரம்பகட்ட விசாரணைக்கு காலவரம்பு நிர்ணயிக்க வேண்டும் எனக்கோரி அதிமுக பொதுச்செயலாளர் தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் மேலும் கால அவகாசம் வேண்டும் என்றும், எவ்வளவு விரைவாக நடத்த முடியுமோ அவ்வளவு விரைவாக நடத்தவோம், காலக்கெடு நிர்ணயிக்க வேண்டாம் என்று கோரினார். அப்போது ஓபிஎஸ் மற்றும் பெங்களூர் புகழேந்தி தரப்பு வழக்கறிஞர்கள் ஆஜராகி, தங்கள் தரப்புக்கு மனுவின் நகல்கள் வழங்கப்படவில்லை என்று தெரிவித்தனர். இதையடுத்து, அவர்களுக்கு நகல்களை வழங்க உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை 10ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

The post அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான மனுக்களின் விசாரணைக்கு காலக்கெடு நிர்ணயிக்க வேண்டாம்: உயர் நீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Election Commission of India ,High Court ,Chennai ,Edappadi Palaniswami ,Election Commission ,general secretary ,Dinakaran ,
× RELATED ஜன.1 முதல் டிசம்பர் 21 வரை குமரி கடல்...