×

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மருத்துவ பொது பிரிவுக்கு இன்று ஆன்லைனில் கலந்தாய்வு: மாணவ, மாணவிகள் இடங்களை தேர்வு செய்யலாம்

சென்னை: தமிழகத்தில்,  ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த மாதம் 27ம் தேதி தொடங்கியது. இந்நிலையில், கலந்தாய்வு நடைமுறையில் மாறுதல்கள் செய்யப்பட்டு, ஆன்லைனில் பதிவு செய்வதை மட்டும் 30ம் தேதி காலை 10 மணிக்கு https://tnmedicalselection.net/ மற்றும் https://www.tnhealth.tn.gov.in/ ஆகிய சுகாதாரத்துறை இணையதளங்களில் தொடங்கியது. அரசு மற்றும் தனியார் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 24,949 பேர் இடம் பெற்றுள்ள நிலையில், பொதுப் பிரிவு கலந்தாய்வில் பங்கேற்க தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 1 முதல் 10,456 பேருக்கு (நீட் மதிப்பெண் – 710 முதல் 410 வரை) அழைப்பு விடுக்கப்பட்டது.நேற்று நள்ளிரவு 11.59 மணி வரை மாணவ, மாணவிகள் ஆன்லைனில் பதிவு செய்தனர். இந்நிலையில், நேற்று அகில இந்திய கலந்தாய்வு முதல் சுற்று முடிவுகள் நேற்று வெளியானதால், திட்டமிட்டபடி தமிழகத்தில் பொதுப் பிரிவு கலந்தாய்வு ஆன்லைனில் இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. வரும் 7ம் தேதி சான்றிதழ் சரிப்பார்ப்புக்கு அழைப்பு விடுக்கப்படும். 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை சான்றிதழ் சரி பார்ப்பு நடைபெறும். 15ம் தேதி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட விவரங்கள் இணையதளங்களில் வெளியிடப்படும். 16ம் தேதி கல்லூரிகளில் சேருவதற்கான ஆணையை இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். 17ம் தேதி முதல் 22ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு கல்லூரிகளில் சேர்ந்துவிட வேண்டும் என்று மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது….

The post எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மருத்துவ பொது பிரிவுக்கு இன்று ஆன்லைனில் கலந்தாய்வு: மாணவ, மாணவிகள் இடங்களை தேர்வு செய்யலாம் appeared first on Dinakaran.

Tags : Medical General Division for MPPS ,Chennai ,Tamil Nadu ,Omanthurar Government Pannoku Higher Special Hospital for MPPS ,
× RELATED அரசின் திட்டங்களால் அரசு பள்ளிகளில்...