×

குன்னம் வட்டம் நன்னை கிராமத்தில் பொது மருத்துவ முகாம்

 

 

குன்னம், ஜூன் 30: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் நன்னை கிராமத்தில் இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் திட்டக்குடி அருண் மருத்துவமனை இணைந்து நடத்திய பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் பொது மருத்துவம், குழந்தைகள் நலம், மகளிர் நலம் மற்றும் எலும்பு மூட்டு தேய்மான பிரச்சனைகளுக்கு அருண் மருத்துவமனை மருத்துவர் கொளஞ்சிநாதன் மற்றும் மருத்துவ குழுவினர் உரிய பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கினார்.
முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு இலவச ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் பரிசோதனை செய்யப்பட்டது. உரிய ஆலோசனைக்கு பின் நோயாளிகளுக்கு இலவசமாக மருந்துகள் வழங்கப்பட்டன.
இதில், வேப்பூர், சாத்தநத்தம், அகரம், வடக்கலூர் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து சுமார் 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு உரிய மருத்துவ ஆலோசனை பெற்றனர். மேலும், குழந்தைகளுக்கு சிறப்பு சிகிச்சைகளும் அளிக்கப்பட்டன.

The post குன்னம் வட்டம் நன்னை கிராமத்தில் பொது மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Tags : Kunnam Taluk Nanai ,Kunnam ,Perambalur ,Youth Welfare Association ,Thittakudi Arun Hospital ,Dinakaran ,
× RELATED குன்னம் அருகே அகரம்சீகூர் பேருந்து நிலையத்தில் நிழலகம் அமைக்க வேண்டும்