×

பெரம்பலூர் எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீர் முகாம்

பெரம்பலூர், டிச. 25: பெரம்பலூர் எஸ்பி அலுவலகத்தில் எஸ்பி ஆதர்ஷ் பசேரா தலைமையில் சிறப்பு மனு முகாம் நேற்று நடைபெற்றது. இந்த சிறப்பு மனு முகாமில் பெரம்பலூர் எஸ்பி பொதுமக்களிடம் நேரடியாக கோரிக்கைகள் புகார்கள் தொடர்பான மனுக்களை கொண்டு விசாரணை நடத்தினர்.

இந்த சிறப்பு மனு முகாமில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் (நகரம்), பெரம்பலூர் (ஊரகம்) பாடாலூர், குன்னம், மங்கல மேடு, அரும்பாவூர், கை.களத்தூர், வி.களத்தூர், மருவத்தூர் காவல் நிலையங்கள், பெரம்பலூர் மாவட்ட மது விலக்கு அமலாக்கப் பிரிவு, பெரம்பலூர் மாவட்ட குற்றப் பிரிவு, பெரம்பலூர் மாவட்ட சைபர் கிரைம் பிரிவு, பெரம்பலூர் மற்றும் மங்கல மேடு அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், பெரம்பலூர் நகரம் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து பிரிவு காவல் நிலையங்கள் மற்றும் சிறப்பு காவல் நிலையங்களை சேர்ந்த இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்துகொண்டனர்.

இந்த சிறப்பு மனு முகாம் மூலம் 20-மனுக்கள் பெறப்பட்டு, சம்மந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டது. இம்முகாமில் எஸ்பி ஆதர்ஷ் பசேரா, பேசியதாவது: ஒவ்வொரு வாரமும் புதன் கிழமை, மாவட்ட எஸ்பி அலுவலகத்தில், சிறப்பு மனு விசாரணை முகாம் நடை பெறும். பொதுமக்கள் இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மனு விசாரணை முகாமில் கலந்து கொள்ள வருபவர்கள் பெரம்பலூர் எஸ்பி அலுவலகம் வருவதற்கு ஏதுவாக, பெரம்பலூர் காவல் துறையின் சார்பாக பாலக்கரையிலிருந்து எஸ்பி அலுவலகத்திற்கும், மீண்டும் எஸ்பி அலுவலகத்தில் இருந்து புதுபஸ்டாண்ட் செல்லவும் பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

 

Tags : Perambalur SP Office ,Perambalur ,SP Office ,SP ,Adarsh Basera ,Perambalur SP ,
× RELATED பெரம்பலூர் அருகே குவாரியில் கல் சரிந்து ஜேசிபி ஆப்ரேட்டர் படுகாயம்