குன்னம், டிச.27: குன்னம் அருகே அகரம்சீகூர் பேருந்து நிலையத்தில் பயணியர் நிழலகம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அகரம்சீகூர் பேருந்து நிலையத்திற்கு தினமும் பொதுமக்கள் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் அரசு ஊழியர்கள் மற்றும் பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் பயணிகள் வந்து செல்கின்றனர்.
பயணிகள் பயன்படுத்தும் வகையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் , கட்டண கழிப்பறைகள், பேருந்து நிலையத்தில் உள்ளே பொதுமக்கள் பயன்படுத்த ஏடிஎம் தானியங்கி மிஷின், ஓட்டுனர்கள் நடத்துனர்கள் இளைப்பாற அறைகள், தாய்மார்கள் பாலூட்டும் சிறப்பு வசதிகள் கொண்ட அறைகள் உள்ளிட்ட வசதியுடன் நிழல்குடை அமைக்க வேண்டுகின்றனர்.
பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு நிழற்குடை அமைக்காமல் இருப்பதால் வெயிலிலும் மழையிலும் பேருந்து ஏற வரும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். ஆகையால் பேருந்து நிலையத்தில் பயணியர்களுக்கு நிழல் குடை இல்லாததால் பேருந்து ஏற வரும் எங்களுக்கு மிகவும் சிரமமாக இருப்பதாக பயணிகள் கூறுகின்றனர் மாவட்ட நிர்வாகம் பேருந்து நிழலகம் அமைத்துத் தருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளும், அமைச்சர் அவர்களுக்கும் கோரிக்கை வைத்துள்ளனர்.
