×

குன்னம் அருகே கழனிவாசலில் இலவச பொது மருத்துவ முகாம்

குன்னம், டிச.27: குன்னம் அருகே கழனிவாசலில் இலவச பொது மருத்துவ முகாமில் ஏரளமான பொதுமக்கள் பங்கேற்றனர். பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் கழனி வாசல் கிராமத்தில் மருத்துவ கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர் நற்பணி மன்றம் இணைந்து பொது மருத்துவ முகாம் மருத்துவர் கொளஞ்சிநாதன் தலைமையில் நடைப்பெற்றது. கழனிவாசல் கிராமத்தை சுற்றியுள்ள கீழக்குடிக்காடு ஆடுதுறை கிராமங்களைச் சேர்ந்த சுமார் 176க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.

பொது மருத்துவ முகாமில் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, இசிஜி பரிசோதனைகள் செய்யப்பட்டன. முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மேலும் காய்ச்சல் இருமல் சளியால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அனைவருக்கும் இலவச மருத்துவ ஆலோசனை மற்றும் மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன. 13 நபர்களுக்கு வாக்கர் மற்றும் வாக்கர் ஸ்டிக் மற்றும் ஒரு நபருக்கு ட்ரை சைக்கிள் வழங்கப்பட்டன. முகாமில் மருத்துவ மாணவருக்கு ஸ்டெத்ஸ்ஸ்கோப் வழங்கப்பட்டது.

 

Tags : Kalanivasal ,Kunnam ,Medical college students ,Youth Welfare Association ,Kunnam taluk, Perambalur ,
× RELATED பெரம்பலூர் அருகே குவாரியில் கல் சரிந்து ஜேசிபி ஆப்ரேட்டர் படுகாயம்