×

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் மாங்குரோவ் காடுகளை வளர்க்க வனத்துறை புதிய முயற்சி

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் மாங்குரோவ் காடுகளை வளர்க்க வனத்துறை புதிய முயற்சி எடுத்து வருகிறது. 1350 ஹெக்டேர் பரப்பளவில் மரக்கன்றுகளை நட்டு மாங்குரோவ் காடுகளை வளர்க்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அரசின் பசுமை தமிழ்நாடு திட்டத்தின் கீழ் 707 ஹெக்டேர் பரப்பில் மாங்குரோவ் காடுகள் மேம்படுத்தப்படுகின்றன. மீன் முள் போன்ற வடிவமைப்பில் கால்வாய்களை வெட்டி 16 லட்சத்துக்கும் மேற்பட்ட மாக்கன்றுகள் நடப்பட்டன. 6 கிராமங்களை சேர்ந்த சதுப்புநிலக் குழுக்கள் சுற்றுச்சூழல் அமைப்பை பாதுகாத்து வளர்த்து வருகின்றன. புதிய முயற்சியை முன்னெடுத்துள்ள மாவட்ட வன அதிகாரி ஸ்ரீகாந்த் உள்ளிட்ட வனத்துறையினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

The post திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் மாங்குரோவ் காடுகளை வளர்க்க வனத்துறை புதிய முயற்சி appeared first on Dinakaran.

Tags : Forestry Department ,Muthuppetta, Thiruvarur district ,Thiruvarur ,Nut Mangurov Forest ,Forest Department ,Mudupetta, Thiruvarur district ,
× RELATED சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது: தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை