×

1,200 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் விருதுநகர், ராசிபுரத்தில் மினி டைடல் பூங்கா: கட்டுமான பணிக்கு அரசு டெண்டர் கோரியது

சென்னை: விருதுநகர், ராசிபுரத்தில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கான கட்டுமான பணிகளை செய்ய தமிழ்நாடு அரசு டெண்டர் கோரி உள்ளது. இதன்மூலம் 1,200 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். விருதுநகர் மாவட்டத்தில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கான கட்டுமான பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு டெண்டர் கோரி உள்ளது. இதன் மூலம் சுமார் 600 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். 12 மாதங்களில் இந்த கட்டுமான பணிகளை முடிக்க டைடல் பூங்கா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

மினி டைடல் பூங்கா கட்டிடத்தில் தலா 500 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் அங்கேயே பணிபுரியும் வகையில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படும். இந்த நிலையில் விருதுநகரில் மினி டைடல் பூங்கா அமைப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. வரைபடம், வடிவமைப்பு தயார் செய்வதற்கான ஆலோசகர்களை தேர்வு செய்யவும் டெண்டர் கோரியுள்ளது. அதேபோன்று, நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கான கட்டுமான பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு டெண்டர் கோரி உள்ளது.

ரூ.34.75 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ள டைடல் பூங்கா மூலம் சுமார் 600 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தரைதளம் மற்றும் மூன்று தளங்களுடன் மினி டைடல் பூங்கா அமையவுள்ளது. இந்த மினி டைடல் பூங்கா கட்டுமான பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு டெண்டர் கோரி உள்ளது. 12 மாதங்களில் இந்த கட்டுமான பணிகளை முடிக்க டைடல் பூங்கா அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

The post 1,200 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் விருதுநகர், ராசிபுரத்தில் மினி டைடல் பூங்கா: கட்டுமான பணிக்கு அரசு டெண்டர் கோரியது appeared first on Dinakaran.

Tags : Mini Tidal Park ,Virudhunagar, Rasipuram ,Chennai ,Tamil Nadu government ,Tamil Nadu ,Virudhunagar district… ,
× RELATED 2025-26ஆம் ஆண்டு பணியிடமாறுதலுக்கான பொது...