×

ஒன்றிய அரசு தொடங்கியுள்ள வக்பு உமித் வலைவாசல் சட்டவிரோதமானது: ஜவாஹிருல்லா கண்டனம்

சென்னை: மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா நேற்று வெளியிட்ட அறிக்கை: ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள வக்பு திருத்தச் சட்டம் 2025 தொடர்பான வழக்கு தற்பொழுது உச்ச நீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ளது. முஸ்லிம் அமைப்புகள் மட்டுமின்றி சமூக நல்லிணக்கத்தை விரும்பும் அனைத்துக் கட்சிகளும் வக்பு திருத்தச் சட்டத்தை கடுமையாக எதிர்த்துள்ளன. இந்நிலையில் ஒன்றிய அரசு “வக்பு உமித் வலைவாசல்”ஐ ஜூன் 6ம் தேதி தொடங்கி, வக்பு சொத்துகளின் பதிவைக் கட்டாயமாக்கி வருகிறது. இந்த நடவடிக்கை முழுமையாகச் சட்டவிரோதமானதுமாகும். இது நேரடியாக நீதிமன்ற அவமதிப்பாகும்.

அரசியல் சாசனத்திற்கு முரணானதாக உள்ள வக்பு திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் வக்பு நிர்வாகிகளும், மாநில வக்பு வாரியங்களும் இந்த வக்பு உமித் வலைவாசல் வழியாக வக்பு சொத்துகளை பதிவு செய்வதை நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை தவிர்க்குமாறு அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த வழிகாட்டலை பின்பற்றுமாறு வக்பு நிர்வாகிகளை கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post ஒன்றிய அரசு தொடங்கியுள்ள வக்பு உமித் வலைவாசல் சட்டவிரோதமானது: ஜவாஹிருல்லா கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Waqf ,Union Government ,Jawahirullah ,Chennai ,Humanity People's Party ,Supreme Court ,Waqf Umit ,Dinakaran ,
× RELATED பாடலாத்ரி நரசிம்மர் கோயிலுக்கு சொந்தமான ரூ.10.66 கோடி நிலம் மீட்பு