மதுரை: பண்ணை வீட்டில் பல கோடி கொள்ளை போன விவகாரத்தால், விஜிலென்ஸ், வருமான வரித்துறைக்கு பயந்து மதுரையைச் சேர்ந்த அதிமுக மாஜி அமைச்சர் புகார் அளிக்காமல் உள்ளார். இவரை போல் தென்மாவட்ட பணத்தை பதுக்கி உள்ள அதிமுக மாஜிக்கள் பலர் பீதியடைந்துள்ளனர். மதுரையைச் சேர்ந்த பாஜ ஆதரவாளரான ரவிக்குமார் தனது சமூக வலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில், ‘மதுரை மாநகர் பாஜ வழக்கறிஞர்களில் சிலர் கட்டப்பஞ்சாயத்துகள் செய்வதும், சட்டத்திற்கு புறம்பான செயல்களை செய்வதும் வாடிக்கையாக உள்ளது. இதை சில பாஜ தலைவர்கள் ஆதரிக்கிறார்கள். மதுரை அதிமுக பிரமுகர் ஒருவரின் பல கோடி பணத்தை ரவுடிகளை வைத்து பறித்து சென்றுள்ளனர். இதனால் பாஜவிற்கும், ஆர்எஸ்எஸ்க்கும் தான் கெட்டப்பெயர் ஏற்படும்’ என்று கூறியிருந்தார். இவரது இந்த பதிவு, அதிமுக மற்றும் பாஜவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரையைச் சேர்ந்த அதிமுக மாஜி அமைச்சர் ஒருவர் துவரிமான் பகுதியில் உள்ள தனது பண்ணை வீட்டில், நகைகள், ஆவணங்கள் மற்றும் கணக்கில் வராத பல ேகாடி கருப்பு பணத்தை லாக்கரில் வைத்து பதுக்கியும் வைத்திருந்துள்ளார். இதை நோட்டமிட்ட ஒரு கும்பல் லாக்கரில் இருந்த சுமார் ரூ.200 கோடிக்கும் அதிகமான பணத்தை கடந்த ஞாயிறன்று மாலை கொள்ளையடித்து சென்ற விவகாரம் ரவிக்குமாரின் சமூக வலைத்தள பதிவின் மூலம் வெளிச்சத்திற்கு வந்தது.
இந்த விவகாரம் வெளியானதை அடுத்து அதிமுக மாஜி அமைச்சர் பணத்தின் மதிப்ைப குறைத்து காட்டினாலும், கொள்ளை போன பணத்தை முழுமையாக குறிப்பிட்டாலும் லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் வருமானவரித்துறை உள்ளிட்ட அமைப்புகளின் பிரச்னையை தேவையில்லாமல் சந்திக்க நேரிடும் என்பதால், அந்த மாஜி அதிகாரப்பூர்வமாக எந்த புகாரும் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.
பணம் கொள்ளைப் போனதால் ரொம்பவே அப்செட்டான மாஜி தனது வழக்கமான எந்தவித பணிகளிலும் ஈடுபடவில்லை. கடந்த 23ம் தேதி முழுவதும் வீட்டிலேயே முடங்கியவர். மறுநாள் சென்னையில் நடந்த மாவட்ட செயலாளர் கூட்டத்திற்கு சென்றுள்ளார். கூட்டம் முடிந்ததும் உடனடியாக விமானம் மூலம் மதுரை திரும்பி வீட்டுக்கு சென்றவர், அன்றிரவு முழுவதும் யாரையும் சந்திக்கவில்லை. வழக்கமாக அவரது செல்போனுக்கு வரும் அழைப்புகளை அவரே எடுத்து பேசும் பழக்கம் இருந்தும், எந்த அழைப்பையும் எடுக்கவில்லை. குறிப்பாக நேற்று அவரது வீட்டில் துக்க நிகழ்வின் நினைவு நாள் என்பதால் வழக்கமாக பலரையும் சந்திக்கும் மாஜி, நேற்று யாரையும் சந்திக்காமல் தவிர்த்து விட்டார்.
அதே நேரம் மதுரை மாஜிக்கு ஏற்பட்ட நிலைமை தென்மாவட்டங்களைச் சேர்ந்த மற்ற அதிமுக மாஜிக்களிடம் ஒருவித பீதியை ஏற்படுத்தியது. தென்மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக மாஜிக்கள் பலரும் 2026ம் ஆண்டில் வரவுள்ள சட்டமன்ற தேர்தலின்போது செலவிடுவதற்காக குறிப்பிட்ட தொகையை கருப்பு பணமாக பினாமிகள் மற்றும் உறவினர்கள் பலர் மூலம் பதுக்கி வைத்துள்ள நிலையில், தங்களுக்கு இதுபோல எதுவும் நடந்துவிடுமோ என்ற பீதியில் உள்ளனர். குறிப்பாக மதுரை மாஜியை தொடர்பு கொண்டு நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்துள்ளனர்.
The post பண்ணை வீட்டில் ரூ.200 ேகாடி கருப்பு பணம் கொள்ளை விஜிலென்ஸ், வருமான வரித்துறைக்கு பயந்து புகார் அளிக்காத அதிமுக மாஜி அமைச்சர்: தென்மாவட்டத்தில் பணம் பதுக்கிய விவிஐபிக்கள் கலக்கம் appeared first on Dinakaran.
