×

முதலில் விமர்சித்துவிட்டு கேரளா ஸ்டோரி டைரக்டருக்கு கால்ஷீட் கொடுத்த ரஹ்மான்

மும்பை: ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை இயக்கிய சுதிப்டோ சென் இயக்கவுள்ள அடுத்த படத்துக்கு ‘சஹாராஸ்ரீ’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். விபுல்ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கத்தில் கடந்த மே 5ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘தி கேரளா ஸ்டோரி’. அடா சர்மா, சித்தி இட்னானி உள்பட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். கேரளாவைச் சேர்ந்த இந்து பெண்கள் முஸ்லிமாக மதம் மாற்றப்பட்டு, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்வது போன்ற கதையை கொண்ட இந்த படத்துக்கு கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் எதிர்ப்பு கிளம்பியது. தென்னிந்தியாவில் சோபிக்காத இப்படம் இந்தி பேசும் மாநிலங்களில் வரவேற்பை பெற்றது. இது உண்மை சம்பவம் கிடையாது. ஜோடிக்கப்பட்ட கதை என்று உச்ச நீதிமன்றத்தில் இயக்குனர் சுதிப்டோ சென் ஒப்புதல் அளித்தார்.

இப்படத்தை தொடர்ந்து சஹாரா இந்தியா பர்வார் நிறுவனத்தை உருவாக்கிய சுப்ரதா ராயின் பயோபிக் படத்தை சுதிப்டோ சென் இயக்கவுள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை படக்குழு நேற்று வெளியிட்டது. இப்படத்துக்கு ‘சஹாராஸ்ரீ’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. தி கேரளா ஸ்டோரி ரிலீசாகும் சமயத்தில், உண்மையான கேரளா ஸ்டோரி இதுதான் என கேரளாவில் ஒரு மசூதியில் இந்து மணமக்களின் திருமணம் நடப்பதை ரஹ்மான் சுட்டிக்காட்டினார். இது தி கேரளா ஸ்டோரிக்கு எதிரான கருத்தாக பார்க்கப்பட்டது. இந்நிலையில் அந்த பட இயக்குனருக்கே ரஹ்மான் கால்ஷீட் கொடுத்திருப்பதால் சமூக ஆர்வலர்கள் ரஹ்மான் மீது கேள்வி எழுப்பி வருகின்றனர்.

The post முதலில் விமர்சித்துவிட்டு கேரளா ஸ்டோரி டைரக்டருக்கு கால்ஷீட் கொடுத்த ரஹ்மான் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Rahman ,Kerala ,Mumbai ,Sudipto Sen ,AR Rahman ,Vibulsha ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED கூடலூர் நகராட்சியில் நிர்வாக மண்டல இயக்குநர் ஆய்வு