×

சிவகாசி சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.7 கோடி நிலத்தை போலியாக பத்திரம் பதிந்து அபகரிக்க திட்டம்: ஆள் மாறாட்டம் செய்த 5 பேர் கைது

சிவகாசி: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே அனுப்பன்குளம் பகுதியில் பழனிச்சாமி, சுப்பையா ஆகியோருக்கு சொந்தமான சுமார் ரூ.7 கோடி மதிப்பிலான இரண்டரை ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை விற்பனை செய்ய கடந்த 16ம் தேதி 5 பேர் கொண்ட கும்பல் சிவகாசி சார்பதிவாளர் அலுவலகத்துக்கு வந்தனர். ஆவணங்களை சார்பதிவாளர் செந்தில்ராஜ்குமார் சரிபார்த்தபோது, அவை போலியானவை எனவும், ஆள்மாறட்டாம் செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து சிவகாசி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

இதையறிந்த 5 பேரும் தலைமறைவாகினர். இதுகுறித்து சார்பதிவாளர் செந்தில் ராஜ்குமார் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ஆள் மாறாட்டம் செய்து போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவுக்கு முயன்ற சிவகாசி மற்றும் தூத்துக்குடி பகுதியை சேர்ந்த ஆனந்தராஜ் (45), சிவக்குமார் (55), கருப்பசாமி (48), மகாராஜா (37), செல்வமணி (57) ஆகிய 5 பேரை நேற்று கைது செய்தனர்.

The post சிவகாசி சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.7 கோடி நிலத்தை போலியாக பத்திரம் பதிந்து அபகரிக்க திட்டம்: ஆள் மாறாட்டம் செய்த 5 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Sivakasi Deputy ,Sivakasi ,Virudhunagar district ,Anuppankulam ,Palanichami ,Supbaia ,Sivakasi Pro-Depositary's ,
× RELATED தேர்தல் போட்டியில் சொந்த கட்சி...