×

தேர்தல் போட்டியில் சொந்த கட்சி நிர்வாகி வீடு சூறை பாஜ மாநில இளைஞரணி துணை தலைவருக்கு வலை: ஆதரவாளர்கள் 5 பேர் கைது

சென்னை: தாம்பரம் அருகே தேர்தல் போட்டியால் சொந்த கட்சி நிர்வாகி வீட்டில் தாக்குதல் நடத்திய பாஜ மாநில இளைஞரணி துணை தலைவரை போலீசார் தேடி வருகின்றனர். அவரது ஆதரவாளர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
தாம்பரம் அருகே முடிச்சூர், வரதராஜபுரம், பிடிசி குடியிருப்பை சேர்ந்தவர் ஓம்சக்தி செல்வமணி (50). ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதி பாஜ அமைப்பாளரான இவர், வரும் சட்டமன்ற தேர்தலில் இத்தொகுதியில் பாஜ சார்பில் போட்டியிடுவதற்கு தீவிரம் காட்டி வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் ஓம்சக்தி செல்வமணி வீட்டுக்குள் நுழைந்த மர்ம கும்பல், இரும்பு ராடு உள்பட பயங்கர ஆயுதங்களுடன் புகுந்து, கார் கண்ணாடி மற்றும் பைக், வீட்டின் கண்ணாடி ஜன்னல்களை அடித்து உடைத்துவிட்டு தப்பி சென்றனர்.

தகவலறிந்த மணிமங்கலம் போலீசார், சம்பவ இடத்துக்கு வந்து நடத்திய விசாரணையில், மணிமங்கலம் பகுதியை சேர்ந்த மாநில பாஜ இளைஞரணி துணை தலைவர் அமர்நாத் (32) என்பவருக்கு, செல்வமணிக்கும் ஏற்கனவே உள்கட்சி பூசல் இருந்து வந்துள்ளது. இதற்கிடையே, வரும் சட்டமன்ற தேர்தலில் செல்வமணி போட்டியிட முடிவு செய்துள்ளார். இதனால், இருவருக்கும் பல்வேறு பிரச்னைகளில் கோஷ்டி பூசல் ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, செல்வமணியின் வீட்டை அமர்நாத் ஆதரவு கும்பல் தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், செல்வமணி வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவு காட்சிகளை ஆய்வு செய்து, அதன்மூலம் தாக்குதலில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்தனர். மேலும், மாநில பாஜ இளைஞரணி துணை தலைவர் அமர்நாத் உள்பட 2 பேரை தேடி வருகின்றனர்.

Tags : BJP state youth wing ,president ,Chennai ,BJP ,wing ,Tambaram ,Mudichur ,Varadarajapuram, PTC ,Tambaram… ,
× RELATED வாட்சப் குழு மூலம் ரூபாய் 3.4 கோடி மோசடி: 3 பேர் கைது; செல்போன் பறிமுதல்