- பாஜா பிரமுகர்
- தாம்பரம்
- ஸ்ரீபிரஹுமுதூர்
- ஓம்சக்தி செல்வமணி
- வரதராஜபுரம், பிடிசி
- நோடச்சூர்
- பாஜா
- ஸ்ரீபிரகாமுதூர் சட்டமன்றத் தொகுதி
- பஜாஜ்
ஸ்ரீபெரும்புதூர்: தாம்பரம் அருகே முடிச்சூர் அடுத்த வரதராஜபுரம், பிடிசி குடியிருப்பை சேர்ந்தவர் ஓம்சக்தி செல்வமணி (50). ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்றத் தொகுதி பாஜ அமைப்பாளர். தற்போது இவர் இத்தொகுதியில் பாஜ சார்பில் போட்டியிடுவதற்கு தீவிரம் காட்டி வருகிறார். இந்நிலையில், நேற்றிரவு 11 மணியளவில் ஓம்சக்தி செல்வமணி வீட்டுக்குள் ஒரு மர்ம கும்பல் இரும்பு ராடு உள்பட பல்வேறு கொடிய ஆயுதங்களுடன் புகுந்து, கார் கண்ணாடி மற்றும் பைக், வீட்டின் கண்ணாடி ஜன்னல்களை அடித்து உடைத்துவிட்டு அடையாளம் தெரியாத வாகனத்தில் தப்பி சென்றனர். இதுகுறித்து தகவலறிந்ததும் மணிமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இதில், மணிமங்கலம் பகுதியை சேர்ந்த மாநில பாஜ இளைஞரணி துணை தலைவர் அமர்நாத் (32)துக்கும் செல்வமணிக்கும் ஏற்கெனவே உள்கட்சி பூசல் இருந்து வந்துள்ளது.
இதற்கிடையே, வரும் சட்டமன்றத் தேர்தலில் செல்வமணி போட்டியிட மும்முரமாக இருந்துள்ளார். இதனால் மாவட்டம் பெரிதா, மாநில பதவி பெரிசா போட்டியில் பல்வேறு பிரச்னைகளில் கோஷ்டி பூசலாக மாறியது. இதன் தொடர்ச்சியாக, செல்வமணியின் வீட்டை இன்று காலை அமர்நாத்தின் ஆதரவு கும்பல் சரமாரி தாக்குதலில் ஈடுபட்டதாகத் தெரியவந்தது. மேலும், செல்வமணி வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காமிரா பதிவு காட்சிகளை ஆய்வு செய்து, அதன்மூலம் தாக்குதலில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்துள்ளனர். இதில் மாநில பாஜ இளைஞரணி துணை தலைவர் அமர்நாத் உள்பட 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
