×

பிரியங்கா மகள் பட்டமளிப்பு விழா; ராகுல் லண்டன் பயணம்: பாஜ யூகங்களுக்கு காங். பதிலடி

புதுடெல்லி: மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி கடந்த வாரம் வெளிநாடு சென்று திரும்பிய நிலையில் தற்போது மீண்டும் லண்டன் சென்றுள்ளார். இந்நிலையில் ராகுலின் வெளிநாட்டு பயணத்தை வழக்கம்போல் பாஜ விமர்சித்துள்ளது. இது குறித்து பாஜவின் ஐடி துறை தலைவர் அமித் மால்வியா தனது எக்ஸ் தள பதிவில், ராகுல்காந்தி அடிக்கடி நாட்டை விட்டு வெளியே வைத்திருக்கும் கவர்ச்சிகரமான விவகாரம் என்ன? எதிர்க்கட்சி தலைவராக இந்திய மக்களுக்கு இது குறித்து அவர் பதிலளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் ஊடக மற்றும் விளம்பரத்தறை தலைவர் பவன் கேரா தனது எக்ஸ் பதிவில், ராகுல்காந்தி லண்டன் சென்றுள்ளார். தனது தங்கை பிரியங்கா காந்தியின் மகள் மிராயா வத்ராவின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக சென்றுள்ளார் என்று கூறியுள்ளார்.

The post பிரியங்கா மகள் பட்டமளிப்பு விழா; ராகுல் லண்டன் பயணம்: பாஜ யூகங்களுக்கு காங். பதிலடி appeared first on Dinakaran.

Tags : Priyanka ,Daughter Graduation Ceremony ,Rahul ,London ,NEW DELHI ,RAKULGANDHI ,BAJA ,Amit Malvia ,Dinakaran ,
× RELATED கூட்டணியிலிருந்து பிரிந்து...