×

முதலிரவுக்கு பிறகு மனைவியின் 30 பவுன், ரூ2.75 லட்சத்துடன் வாலிபர் ஓட்டம்: முதல் மனைவியின் வீட்டில் பதுங்கியவர் கைது

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே திருமணம் முடிந்து முதலிரவுக்கு பின்னர் மறுநாளே மனைவியின் 30 பவுன் நகைகள் மற்றும் ரூ.2.75 லட்சம் பணத்துடன் நைசாக ஓட்டம் பிடித்த வாலிபரை முதல் மனைவியின் வீட்டில் போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் காயங்குளம் பகுதியை சேர்ந்தவர் அசாருதீன் ரஷீது (30). இவருக்கும் அடூர் பழகுளம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த 30ம் தேதி திருமணம் நடந்தது. திருமணத்தின் போது பெண் வீட்டார், அசாருதீனுக்கு 30 பவுன் நகை, பணம், பொருட்களை வரதட்சணையாக கொடுத்தனர். கேரளாவில் பொதுவாக முஸ்லிம் சமுதாயத்தில் திருமணம் முடிந்த பிறகு முதலிரவு மணமகள் வீட்டில்தான் நடத்தப்படும். அதன்படி திருமணம் முடிந்த அன்று இரவு ரஷீத், தனது மனைவியின் வீட்டில் தங்கினார். முதலிரவு முடிந்த மறுநாள் காலையில், தனது நெருங்கிய நண்பர் ஒருவர் விபத்தில் சிக்கியுள்ளதாகவும், அவரை பார்க்க மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று மனைவியிடம் கூறிவிட்டு அசாருதீன் புறப்பட்டார். நீண்ட நேரமாகியும் அசாருதீன் வீட்டுக்கு திரும்பவில்லை. போனில் அழைத்தபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. சந்தேகமடைந்த பெண் வீட்டார், வீட்டில் நகைகள் வைத்திருந்த பெட்டியை பரிசோதித்னர். 30 பவுன் நகை, ரூ.2.75 லட்சம் ஆகியவற்றை காணவில்லை. அதிர்ச்சியடைந்த பெண் வீட்டார், அசாருதீனின் வீட்டுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் அடூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அசாருதீனுக்கு ஆலப்புழாவை சேர்ந்த ஒரு பெண்ணுடன் ஏற்கனவே திருமணமாகி இருந்தது. அவரது வீட்டில்தான் அசாருதீன் உள்ளதாக தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று அவரை கைது செய்து சிறையிலடைத்தனர்….

The post முதலிரவுக்கு பிறகு மனைவியின் 30 பவுன், ரூ2.75 லட்சத்துடன் வாலிபர் ஓட்டம்: முதல் மனைவியின் வீட்டில் பதுங்கியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Thiruvananthapuram ,Battanamthitta ,Kerala State ,Dinakaran ,
× RELATED ஓடும் பஸ்சிலிருந்து கீழே விழ இருந்த வாலிபரை காப்பாற்றிய கண்டக்டர்