×

கிணற்றில் விழுந்த குழந்தை காப்பாற்ற முயன்ற கர்ப்பிணி பலி

கீழ்பென்னாத்தூர்: திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த வீரபத்திரன் நகரை சேர்ந்தவர் விக்னேஷ், விவசாயி. இவரது மனைவி உமாதேவி(25). இவர்களது ஒன்றரை வயது பெண் குழந்தை மோகனாஸ்ரீ. நேற்று மதியம் வெளியே விளையாடிக்கொண்டிருந்த குழந்தை மோகனாஸ்ரீ, அருகே உள்ள விவசாய கிணற்றில் திடீரென தவறி விழுந்துள்ளது.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த தாய் உமாதேவி, குழந்தையை காப்பாற்ற கிணற்றில் குதித்தார். ஆனால் நீச்சல் தெரியாததால் இருவரும் நீரில் மூழ்கினர். தகவலறிந்து தீயணைப்பு படையினர் வந்து ஒரு மணி நேரம் போராடி உமாதேவி, குழந்தை மோகனாஸ்ரீயை சடலங்களாக மீட்டனர். உமாதேவி தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து கீழ்பென்னாத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post கிணற்றில் விழுந்த குழந்தை காப்பாற்ற முயன்ற கர்ப்பிணி பலி appeared first on Dinakaran.

Tags : Kilpennathur ,Vignesh ,Veerabhadra Nagar ,Tiruvannamalai district ,Umadevi ,Mohanasree ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி 1232 கன அடியாக உள்ளது!