×

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் கீழ் தண்ணீர் தர மறுத்தால் இந்தியாவுடன் போர்: பாக். மாஜி அமைச்சர் அடாவடி

இஸ்லாமாபாத்: ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22ம் தேதி தீவிரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து பாகிஸ்தான் உடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்தது. இந்நிலையில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி ஆற்றிய உரையில், ”இந்தியாவுக்கு 2 வழிகள் உள்ளன. பாகிஸ்தானுடன் நியாயமாக தண்ணீரை பகிர்ந்து கொள்ளுங்கள் அல்லது போர் தொடுத்து ஆறு நதிகளை எங்கள் வசம் எடுத்துக்கொள்வோம்.

சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது இந்தியாவின் கூற்று. இது சட்டவிரோதமானது. ஏனெனில் சர்வதேச நீர் வழங்கும் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படவில்லை. இது பாகிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் கட்டுப்படுகிறது. ஐநா சபையின் சாசனத்தின்படி தண்ணீரை நிறுத்தும் அச்சுறுத்தல் சட்டவிரோதமானது. இந்தியா அச்சுறுத்தலை பின்பற்ற முடிவு செய்தால் நாங்கள் மீண்டும் போரை நடத்த வேண்டியிருக்கும் ” என்றார்.

 

The post சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் கீழ் தண்ணீர் தர மறுத்தால் இந்தியாவுடன் போர்: பாக். மாஜி அமைச்சர் அடாவடி appeared first on Dinakaran.

Tags : Former Minister ,Atawadi ,Islamabad ,Pahalgam, Jammu and ,Kashmir ,India ,Pakistan ,Foreign Minister ,Pakistani Parliament… ,
× RELATED பயணத்தடை கட்டுப்பாடுகள் பட்டியலில் மேலும் 20 நாடுகள்: அமெரிக்கா அதிரடி