- அஇஅதிமுக
- அமைச்சர்
- ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு விழா
- தொண்டாமுத்தூர்
- முன்னாள்
- எஸ்.பி. வேலுமணி
- பேரூர் தமிழ் கல்லூரி
- கோயம்புத்தூர்
- ஆர்எஸ்எஸ்
- மோகன் பகவத்
- தில்லி
- கோவை…
- மோகன்
- வேல்
தொண்டாமுத்தூர்: கோவை அடுத்த பேரூர் தமிழ் கல்லூரியில் நடந்த ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவில் அதிமுக மாஜி அமைச்சர் எஸ்பி வேலுமணி பங்கேற்றது பரபரப்பை ஏற்படுத்தியது. கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் நேற்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை விமான நிலையம் வந்தார். அவர் அங்கிருந்து கார் மூலம் குரும்பபாளையம் பாலத்துறை வழியாக சுண்டக்காமுத்தூரில் உள்ள நாச்சிகோனார் தோட்டத்துக்கு சென்றார். அங்கு அவர் முக்கிய பிரமுகர்களை சந்தித்தார்.
இதைத்தொடர்ந்து இரவு அங்கு தங்கி ஓய்வு எடுத்தார். இன்று காலை பேரூர் ஆதீனம் மடத்துக்கு சென்றார். அங்கு பேரூர் ஆதீனம் 24வது குருமகா சன்னிதானம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பு நூற்றாண்டு விழாவில் பங்கேற்றார்.
விழாவில் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்பட பலர் பங்கேற்றனர். முன்னதாக மோகன் பகவத்துக்கு முருகப்பெருமானின் வேல் கொடுத்து வரவேற்பு அளித்தனர். இதைத்தொடர்ந்து பேரூர் படித்துறைக்கு சென்ற மோகன்பகவத், நொய்யல் ஆற்றை பார்வையிட்டார். பின்னர் கார் மூலம் கோவை விமான நிலையம் சென்று மீண்டும் டெல்லி புறப்பட்டு சென்றார்.
The post ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவில் அதிமுக மாஜி அமைச்சர் பங்கேற்பு: மோகன் பகவத்துக்கு வேல் பரிசு appeared first on Dinakaran.
