×

தவெக கூட்டணியில் டிடிவி, ஓபிஎஸ்: செங்கோட்டையன் பேட்டி

கோவை: தவெக கூட்டணியில் டிடிவி தினகரன், ஓபிஎஸ் இடம் பெறுவார்கள் என தவெக தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் தவெக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது: தவெக தலைவர் விஜயால் சட்டமன்ற தேர்தலில் 2வது இடத்தை பிடிக்க முடியாது, வரலாற்றை மாற்ற முடியாது என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்தது குறித்தான கேள்விக்கு, ‘தவெக புதிய வரலாற்றை படைக்கக்கூடிய இயக்கமாகத்தான் எதிர்காலத்தில் அமையப் போகிறது. மக்களின் நிலை என்ன என்பதை களத்தில் தான் காண வேண்டும்.

தவெக ரசிகர் மன்றமாக தான் உள்ளது என்று காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் கூறியுள்ளார். இதுபோல், ‘ஒவ்வொருவரும் ஒரு கருத்துக்களை சொல்வார்கள். அதற்கெல்லாம் பதில் சொல்வது சரியாக இருக்காது. அதிமுகவில் இருந்து எத்தனை பேர் தவெகவில் இணைவார்கள் என்பதை பொங்கல் வரை பொறுத்திருந்து பாருங்கள். தவெக கூட்டணியில் டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இடம்பெறுவார்கள். இவ்வாறு செங்கோட்டையன் தெரிவித்தார்.

Tags : DTV ,Chengkotayan ,Takeka Alliance ,KOWAI ,DINAKARAN ,OPS ,DAVEKA ALLIANCE ,SAID STEVEKA ,CHIEF COORDINATOR ,SENKOTAYAN ,Taveka Group ,Goa Airport ,Senkottaian ,Daveka ,Vijayal ,
× RELATED பாஜ இந்திய வாஷிங் மெஷின்; தவெக நவீன...