×

அரசின் முயற்சியால் விவசாயிகள் ‘மா’ விற்பதை பொறுக்க முடியாமல் அதிமுக போராட கிளம்பியுள்ளது: அமைச்சர் கண்டனம்

சென்னை: வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மாம்பழக்கூழ் உற்பத்திக்கென்றே பெருமளவு பயன்படுத்தப்படும் பெங்களூரா ரக மாம்பழம் கொள்முதல் செய்யப்படாமல் தேக்கம் அடைந்த சூழல் நிலவியதாக அறிய வந்த உடனேயே கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சி தலைவர் மாம்பழக்கூழ் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி நியாயமான விலையில் கொள்முதல் செய்ய அறிவுறுத்தப்பட்டனர். மா பதப்படுத்தும் நிறுவனங்களுடன் கடந்த 16ம் தேதி ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தற்போது அனைத்து மாம்பழக்கூழ் தயாரிப்பு நிறுவனங்களும் பெங்களூரா ரக மாங்கனிகளை கொள்முதல் செய்து வருகின்றனர்.

விவசாயிகளும் தங்களது மாங்கனிகளை இந்நிறுவனங்களிடம் மாம்பழக்கூழ் தயாரிக்க உரிய விலையில் அளித்து வருகின்றனர். மாங்கனிகள் கொள்முதல் ஆகஸ்ட் மாதம் இரண்டாம் வாரம் வரை நடைபெறும். எனவே, ‘மா’ விவசாயிகளுக்கு லாபம் கிடைத்திட இந்த அரசு ஏற்கனவே நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.‘மா’ தொடர்பான பிரச்னை முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், இப்பிரச்னையை பெரிதாக்கி அரசியல் செய்ய முயற்சித்த எதிர்க்கட்சிகள், அரசின் முயற்சியால் விவசாயிகள் ‘மா’ விற்பனை செய்வதை பொறுக்க முடியாமல் போராட்டம் நடத்துவதாக கிளம்பியுள்ளது தேவையற்ற ஒன்று. எனவே, தமிழ்நாட்டு மக்களின் கவனச்சிதறல்கள் ஏதுமில்லாமல் திராவிட மாடல் அரசுக்கு நாள்தோறும் விவசாயிகளின் ஆதரவு பெருகி வருவதை நாட்டு மக்கள் அனைவரும் அறிந்திருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post அரசின் முயற்சியால் விவசாயிகள் ‘மா’ விற்பதை பொறுக்க முடியாமல் அதிமுக போராட கிளம்பியுள்ளது: அமைச்சர் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Chennai ,Welfare ,Minister ,M.R.K. Panneerselvam ,Bengaluru ,Krishnagiri ,District ,Administrative ,Chief… ,Dinakaran ,
× RELATED பல ஆண்டுகளாக வேலை செய்தும் செயலாளர்...