சென்னை: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ‘பாஸ்டேக்’ கட்டணமாக ஆண்டுக்கு ரூ.3000க்கு பாஸ் வழங்கும் அற்புத திட்டத்தை அறிவித்துள்ள ஒன்றிய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு நாட்டு மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தேசிய நெடுஞ்சாலைகளில் கார் உள்ளிட்ட வாகனங்களில் பயணம் செய்வோருக்கு பெருமளவில் உதவிகரமாக இருக்கும் புரட்சிகரமான திட்டம் இது. சுங்கச் சாவடிகளில் டிஜிட்டல் முறையில் சுங்கக் கட்டணம் செலுத்த ‘பாஸ்டேக்’ முறை அமல்படுத்தப்பட்டதால் வாகனங்கள் மணிக்கணக்கில் காத்திருக்கும் தேவை இல்லாமல் போனது. இது வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ள, ஆண்டு பாஸ் வழங்கும் திட்டம் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் செல்வோருக்கு செலவு குறைவதுடன், பெரிய அளவில் பணத்தை சேமிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post தேசிய நெடுஞ்சாலையில் பயணிப்போருக்கு ஆண்டுக்கு ரூ.3000க்கு பாஸ்டேக் பாஸ் வழங்கும் திட்டம் மற்றுமொரு மைல்கல்: ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் பெருமிதம் appeared first on Dinakaran.
