டெல்லி : தமிழில் விஷ்ணுபுரம் சரவணனுக்கு 2025ஆம் ஆண்டுக்கான பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டது. பால சாகித்திய புரஸ்கார் விருது சாகித்திய அகாதமியால் குழந்தைகள் இலக்கியத்திற்குச் சேவை புரிபவர்களுக்கு வழங்கப்படும் விருதாகும். இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் வெளியாகும் சிறந்த குழந்தைகளுக்கான இலக்கியப் படைப்புகளுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.
சிறந்த இலக்கிய படைப்பாளிக்களுக்கு ஆண்டு தோறும் ஒன்றிய அரசு சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கி வருகிறது. அதன்படி 24 மொழிகளில் வெளியாகும் சிறந்த குழந்தைகளுக்கான இலக்கியப் படைப்புகளுக்கு பால சாகித்ய புரஸ்கார் விருதும், 35 வயதுக்குட்பட்ட இளம் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் சாகித்ய அகாடமி யுவ புரஸ்கார் விருதுக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ‘ஒற்றைச் சிறகு ஒவியா’ என்ற புதினத்திற்காக விஷ்ணுபுரம் சரவணனுக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டது. விஷ்ணுபுரம் சரவணனுக்கு பால புரஸ்கார் விருதுடன் ரூ.50,000 பரிசுத் தொகை வழங்கப்படும். தமிழில் விஷ்ணுபுரம் சரவணணுக்கு 2025ஆம் ஆண்டுக்கான பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் எழுதிய ஒற்றைச் சிறகு ஓவியா என்கிற சிறார் நாவலுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர் எழுதி, பாரதி புத்தகாலயம் வெளியிட்ட ஒற்றைச் சிறகு ஓவியா என்கிற சிறார் நாவலுக்கு இந்த விருது அளிக்கப்படுகிறது. தமிழில் தொடர்ந்து சிறார் கதைகள், நாவல்கள் எழுதிவரும் விஷ்ணுபுரம் சரவணன், கயிறு, நீலப்பூ உள்ளிட்ட புத்தகங்களையும் எழுதியுள்ளார். அதே போல் ‘கூத்தொன்று கூடிற்று’ என்ற சிறுகதை தொகுப்புக்காக மதுரையைச் சேர்ந்த எழுத்தாளர் லட்சுமிஹர்-க்கு சாகித்ய அகாடமி யுவ புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
The post தமிழில் விஷ்ணுபுரம் சரவணனுக்கு 2025ம் ஆண்டுக்கான பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிப்பு..!! appeared first on Dinakaran.
