- அமைச்சர்
- Ottansatram
- ஒட்டன்சத்திரம் தொகுதி
- வீரலபட்டி
- தங்காச்சியம்மபதி
- ஓடைப்பட்டி
- கே. சமூக மையம்
- அங்கன்வாடி நிலையம்
- நியாய விலை கடை
- தியேட்டர் மேடை
- சாலை அபிவிருத்தி
- பயணிகள் நிழல்கள்
- ஓரடாச்சி கிளப்
- Keeranur
- ஜோஜிபதி
- வலைப்பட்டி
- இத்யகோட்
- தின மலர்
ஒட்டன்சத்திரம், ஜூன் 18: ஒட்டன்சத்திரம் தொகுதிக்குட்பட்ட வீரலப்பட்டி, தங்கச்சியம்மாபட்டி, ஓடைப்பட்டி, கே. கீரனூர், ஜோகிபட்டி, வலையபட்டி இடையகோட்டை உள்ளிட்ட கிராம பகுதிகளில் சமுதாயக்கூடம், அங்கன்வாடி மையம், நியாயவிலை கடை, நாடக மேடை, சாலை மேம்பாடு, பயணிகள் நிழற்குடை, ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், புதிய பள்ளி கட்டிடம் உள்ளிட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் முடிவுற்ற திட்ட பணிகள் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி கலந்து கொண்டு புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்ட பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சிகளில் திட்ட இயக்குனர் திலகவதி, கோட்டாட்சியர் கண்ணன், வட்டாட்சியர் சஞ்சய் காந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் காமராஜ், நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் பொன்னுவேல், ஒன்றிய செயலாளர்கள் ஜோதிஸ்வரன், தர்மராஜ், பாலு, ஒன்றிய துணை செயலாளர்கள் முருகானந்தம், சிவபாக்கியம் ராமசாமி, தமிழ்ச்செல்வி ராஜா, ராமகிருஷ்ணன், ஒன்றிய அவை தலைவர் செல்லமுத்து, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ராஜேந்திரன், முருகானந்தம், சுப்பிரமணி விஜயலட்சுமி சண்முகசுந்தரம், சரவணன், ஆனந்தகுமாரி சத்தியமூர்த்தி, முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் செல்வராஜ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்கள் அசோக் வேலுச்சாமி, மணி பாரதி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post ஒட்டன்சத்திரம் பகுதியில் முடிவுற்ற திட்ட பணிகளை துவக்கி வைத்தார் அமைச்சர் appeared first on Dinakaran.
