×

மேகாலயா ஹனிமூன் கொலை கணவரை கொன்றது எப்படி? நடித்து காட்டிய சோனம்: சிரபுஞ்சிக்கு அழைத்துச்சென்று போலீசார் வீடியோ பதிவு

ஷில்லாங்: மேகாலயா ஹனிமூன் கொலையை செய்தது எப்படி என்று சோனம் நடித்துக்காட்டினார். அதை போலீசார் வீடியோவில் பதிவு செய்தனர். மத்தியபிரதேச மாநிலம் இந்தூர் தொழில் அதிபர் ராஜா ரகுவன்ஷி, அவரது மனைவி சோனம் ஆகியோர் மேகாலயா மாநிலம் சிரபுஞ்சிக்கு ஹனிமூன் வந்த போது மே 23ஆம் தேதி ராஜா கொல்லப்பட்டார்.

இந்த கொலையில் அவரது மனைவி சோனம், காதலன் ராஜ் குஷ்வாகா, கூலிப்படையை சேர்ந்த விஷால், ஆனந்த், ஆகாஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.  இந்த வழக்கை விசாரிக்கும் மேகாலயா காவல்துறையின் சிறப்பு புலனாய்வுக் குழு நேற்று பலத்த பாதுகாப்புடன் கொலை நடந்த சிரபுஞ்சி மலைப்பகுதிக்கு சோனம் உள்ளிட்ட 5 பேரையும் அழைத்துச்சென்றனர்.

அங்கு ராஜாவை கொன்றது எப்படி என்பது குறித்து சோனம் மற்றும் கூலிப்படையை சேர்ந்த 3 பேரும் நடித்து காட்டினர். அதை போலீசார் வீடியோவில் பதிவு செய்து கொண்டனர்.மேலும் ராஜாவின் கொலைக்கு 2 கத்திகள் பயன்பட்டது தெரிய வந்துள்ளது. தற்போது ஒரு கத்தி மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. ராஜா கொலையை நடித்து காட்டிய போது சோனம் கடுமையாக வருந்தியதாக போலீசார் தெரிவித்தனர்.

The post மேகாலயா ஹனிமூன் கொலை கணவரை கொன்றது எப்படி? நடித்து காட்டிய சோனம்: சிரபுஞ்சிக்கு அழைத்துச்சென்று போலீசார் வீடியோ பதிவு appeared first on Dinakaran.

Tags : Meghalaya ,Sonam ,Cherrapunji ,Shillong ,Madhya Pradesh ,Indore ,Raja Raghuvanshi ,
× RELATED குடியரசு தின அணிவகுப்பு விழாவில் தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி