- குற்றால அருவி
- தென்காசி
- குற்றால மெயின் அருவி
- ஐண்டருவி
- புலி நீர்வீழ்ச்சி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தின மலர்
தென்காசி: குற்றால மெயின் அருவி, ஐந்தருவி, புலி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. குற்றால அருவியில் வெள்ளப் பெருக்கு குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் தென்காசியில் பெய்த கனமழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி அருவிகளில் குளிக்க கடந்த 2 நாட்களாக தடை விதிக்கப்பட்டது. இதனால், வெளியூர்களில் இருந்து குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்நிலையில் இன்று அருவியில் தண்ணீரின் அளவு குறைந்ததை அடுத்து மெயின் அருவி, ஐந்தருவியில் மீண்டும் கற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.
குற்றாலம் பகுதியில் லேசான வெயிலுடன் இதமான குளிர்ந்த காற்றும் வீசி வருவதால் குற்றால மெயின் அருவி, ஐந்தருவி, புலி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.
The post குற்றால அருவியில் வெள்ளப் பெருக்கு குறைந்ததால் குளிக்க அனுமதி appeared first on Dinakaran.
