×

மேற்கு வங்கத்தில் பிஎஸ்எப் அதிகாரியை சுட்டு கொன்ற வீரர் கைது

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் எல்லைப்பாதுகாப்பு படை அதிகாரியை சுட்டு கொன்ற வீரர் கைது செய்யப்பட்டார். மேற்குவங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் அண்மையில் வகுப்புவாத மோதல்கள் ஏற்பட்டன. இதையடுத்து அங்கு எல்லைப்பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முர்ஷிதாபாத் மாவட்டம் துலியன் என்ற இடத்தில் எல்லைப்பாதுகாப்பு படை முகாமில் இருந்த தலைமை காவலர் ரத்தன் சிங் ஷெகாவத்துக்கும், எல்லைப்பாதுகாப்பு படை வீரர் சிவம் குமார் மிஸ்ரா என்பவருக்கும் திடீரென கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த சிவம் குமார் மிஸ்ரா தன்னிடமிருந்த துப்பாக்கியால் தலைமை காவலர் ரத்தன் சிங் ஷெகாவத்தை சுட்டார். இதில் பலத்த காயமடைந்த ரத்தன் சிங் ஷெகாவத் உயிரிழந்தார். இதையடுத்து பாதுகாப்பு படை வீரர் சிவம் குமார் மிஸ்ராவை காவல்துறையினர் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.

The post மேற்கு வங்கத்தில் பிஎஸ்எப் அதிகாரியை சுட்டு கொன்ற வீரர் கைது appeared first on Dinakaran.

Tags : BSF ,West Bengal ,Kolkata ,Border Security Force ,Murshidabad, West Bengal ,Dhulian, Murshidabad ,Dinakaran ,
× RELATED 2002 பட்டியலுடன் இணைப்பதில் தொழில்நுட்ப சிக்கல்: தேர்தல் ஆணையம் விளக்கம்