×

இந்தியாவில் மலேரியா முற்றிலும் ஒழிக்கப்படும்: அமித் ஷா தகவல்

அகமதாபாத்: அகில இந்திய மருத்துவ (ஐஎம்ஏ) ஐஎம்ஏ நேட்கான்-2025 நிகழ்ச்சியில் அமைச்சர் அமித் ஷா பேசுகையில்,‘‘இந்தியாவில் மலேரியா பாதிப்பு 97% குறைந்துள்ளது. இன்னும் குறுகிய காலத்தில் நாட்டில் மலேரியா நோய் முற்றிலும் ஒழிக்கப்படும். டெங்கு இறப்பு விகிதத்தை 1 % ஆக அரசால் குறைக்க முடிந்துள்ளது.

அதே போல் பிரசவ நேரத்தின் போது தாய்மார்கள் இறக்கும் விகிதம் 25 % குறைந்துள்ளது. கடந்த 2014ல் சுகாதார துறைக்கான பட்ஜெட் ரூ.37000 கோடியாக இருந்தது. தற்போது சுகாதாரத்துக்கு பட்ஜெட்டில் ரூ.1.28 லட்சம் கோடி ஒதுக்கப்படுகிறது’’ என்றார்.

Tags : India ,Amit Shah ,Ahmedabad ,All India Medical (IMA) IMA Netcon-2025 event ,Minister ,
× RELATED நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லும்...