மைசூரு: மைசூரு மாவட்டம் ஹூன்சூரில் தாலுகா பஸ்நிலையம் உள்ளது. இதன் பின்புறம் ஸ்கை தங்க நகைக்கடை இயங்கி வருகிறது. இந்தநிலையில், பட்டப்பகலில் இந்த கடைக்குள் சில மர்மநபர்கள் புகுந்துள்ளனர். அப்போது அவர்கள் துப்பாக்கியால் மேனேஜரை சுட்டுள்ளனர். இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் செய்வதறியாது திகைத்து நின்றுள்ளனர்.
அப்போது மர்மநபர்கள் சுமார் ரூ.4 முதல் 5 கோடி மதிப்பிலான தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். அவர்கள் வந்தபோது சில வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் இருந்ததாகவும், அவர்களை பணயம் வைத்து இந்த கொள்ளை நடந்துள்ளதாக கூறப்படுகிறது. பட்டப்பகலில் நடந்த பரபரப்பு சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், மாவட்ட போலீஸ் எஸ்பி தலைமையில் தனிப்படை அமைத்து அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அக்கம் பக்கத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களில் கொள்ளையர்களின் பைக்குகளை டிரேஸ் செய்யும் பணிகளும் நடந்தது. மேலும், கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
