×

தேசத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

போச்சம்பள்ளி, ஜூன் 14: போச்சம்பள்ளி அருகே தாமோதரஅள்ளி ஊராட்சி சாதிநாயக்கன்பட்டி கிராமத்தில், தேசத்து மாரியம்மன், நாகவள்ளி, பெரிய மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அதிகாலை பூஜை, துர்தேவிக்கு இரண்டாம் கால யாகம், தத்வஹோமம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. ெதாடர்ந்து திருக்குடம் புறப்பாடு, சக்தி கலசங்கள், ஆலய வலம் வருதல் நடைபெற்றது. பின்னர் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது. விழாவில் சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

The post தேசத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.

Tags : Desathu ,Mariamman Temple ,Kumbabhishekam ,Pochampally ,Desathu Mariamman ,Nagavalli ,Periya Mariamman Temple ,Sadinayakkanpatti ,Damodharalli panchayat ,Durdevi ,Tatvahomam ,Deeparathanai ,Mariamman ,Temple ,
× RELATED வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்