×

வடலூர் அருகே குண்டர் சட்டத்தில் பிரபல ரவுடி கைது

வடலூர், ஜூன் 14: வடலூர் அருகே குண்டர் சட்டத்தில் பிரபல ரவுடி கைது செய்யப்பட்டார். குள்ளஞ்சாவடி அண்ணா பாலம் அருகே கடந்த மாதம் 22ம் தேதி தேதி கையில் கத்தியுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஒருவர் பேசி கொண்டிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் உதவி ஆய்வாளர் உலகநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றபோது அந்த நபர் போலீசாரை அசிங்கமாக திட்டி, என்னை பிடிக்க கிட்ட வந்தால் உங்களை வெட்டி விடுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்து தப்பி ஓட முயன்றார். அவரை மடக்கி பிடித்து காவல் ஆய்வாளர் பாண்டிச்செல்வி விசாரணை மேற்கொண்டார். அதில் குள்ளஞ்சாவடி அருகே அகரம் ரோட்டு தெருவை சேர்ந்த பாக்கியராஜ் மகன் அஸ்வின் (23) என்பது தெரிய வந்தது. பின்னர் அஸ்வின் மீது வழக்குப்பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட அஸ்வின் மீது குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில் போக்சோ, வழிப்பறி, ஆயுத வழக்கு உட்பட 6 வழக்குகளும், கடலூர் முதுநகர் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் என மொத்தம் 7 வழக்குகள் உள்ளன. இவரின் குற்ற செயலை கட்டுப்படுத்தும் பொருட்டு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பரிந்துரையின்பேரில் கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஓராண்டு காலம் குண்டர் தடுப்பு காவலில் வைக்க உத்தரவிட்டார். பின்னர் அஸ்வின் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

The post வடலூர் அருகே குண்டர் சட்டத்தில் பிரபல ரவுடி கைது appeared first on Dinakaran.

Tags : Vadalur ,Anna Bridge ,Kullanchavadi ,Dinakaran ,
× RELATED நித்திரவிளை அருகே கல்லூரி மாணவி மாயம்