குடியாத்தம், ஜன. 1: கொல்கத்தாவில் இருந்து 75 கிலோ கஞ்சா கடத்திய லாரியை போலீசார் பறிமுதல் செய்து, திருவண்ணாமலை, வாணியம்பாடியை சேர்ந்த 2 பேரை கைது செய்தனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே உள்ள தமிழக ஆந்திர எல்லையான பரதராமி சோதனை சாவடியில் நேற்று போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது கொல்கத்தாவில் இருந்து குடியாத்தம் வழியாக ஈரோடு நோக்கி சென்ற லாரியை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் கஞ்சா இருந்தது தெரியவந்தது. பின்னர் போலீசார் லாரியை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் லாரியில் இருந்த 75 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து, திருவண்ணாமலையை சேர்ந்த பிரகாஷ் (33), வாணியம்பாடி பகுதிைய சேர்ந்த வெங்கடேஷ் (44) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
