×

விழுப்புரம் பழைய பேப்பர் குடோனில் தீ விபத்து

விழுப்புரம், ஜன. 1: விழுப்புரம் மேல் தெரு பகுதியில் பழைய பேப்பர் குடோன் ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று பிற்பகல் பேப்பர் குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் தீப்பற்றி எரிந்தது. பின்னர் கரும்புகை வெளியேறியதும் இதை பார்த்த அப்பகுதி மக்கள் உடனே விழுப்புரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் இந்த தீ விபத்தில் குடோனில் இருந்த ரூ.50,000 மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாயின. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை உடனே அணைத்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த திடீர் தீ விபத்து சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

 

Tags : Villupuram ,Villupuram Upper Street ,
× RELATED முன்னாள் மாணவர்கள் நெகிழ்ச்சி...