×

அரசு டெண்டர் முறைகேடு பீகாரில் அமலாக்கத்துறை சோதனை

புதுடெல்லி: பீகாரில் அரசு டெண்டர்களில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினார்கள். பீகாரில் அரசு வழங்கிய டெண்டர்களில் முறைகேடுகள் கண்டறியப்பட்டன. இது தொடர்பாக சிறப்பு கண்காணிப்பு பிரிவு பாட்னாவை சேர்ந்த ஒப்பந்ததாரர் ரிஷி ஸ்ரீ என்பவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்தது. இதன் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் டெண்டர் முறைகேடு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் பீகார், குஜராத் மற்றும் அரியானாவின் 9 இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. இந்த சோதனையின்போது முக்கிய ஆதாரங்கள் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

The post அரசு டெண்டர் முறைகேடு பீகாரில் அமலாக்கத்துறை சோதனை appeared first on Dinakaran.

Tags : Enforcement Department ,Bihar ,New Delhi ,Special Monitoring Unit ,Rishi… ,Dinakaran ,
× RELATED யுஜிசி, ஏஐசிடிஇ, என்சிடிஇ ஆகியவற்றை...