×

சீரடி சாய்பாபா கோயிலில் சிறப்பு ஆராதனை

 

திருத்துறைப்பூண்டி, ஜூன் 13:திருத்துறைப்பூண்டி சீரடி சாய்பாபா ஆலயத்தில் வியாழக்கிழமை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனையும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாபா தரிசனம் செய்தனர். திருத்துறைப்பூண்டி நாகை சாலையில் உள்ள புகழ் பெற்ற சீரடி சாய்பாபா ஆலயத்தில் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாபா தரிசனம் செய்வது வழக்கம்.

வியாழக்கிழமைகளில் காலையிலிருந்து இரவு வரை ஆயிரக்கணக்கான பாபா பக்தர்கள் பாபாவை வழிபட வருவது வழக்கம். பால் சந்தனம் நெய் தேன் பன்னீர் போன்ற பொருட்களால் பாபாவிற்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று சிறப்பு தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பாபாவை தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

The post சீரடி சாய்பாபா கோயிலில் சிறப்பு ஆராதனை appeared first on Dinakaran.

Tags : Shirdi Sai ,Baba ,Temple ,Thiruthuraipoondi ,Shirdi Sai Baba Temple ,Nagai Salai ,
× RELATED மூதாட்டிகளிடம் சில்மிஷம் வன்கொடுமை சட்டத்தில் வாலிபர் கைது