- நீடாமங்கலம்
- தொழிலாளர் நல வாரியம்
- திருவாரூர்
- திருவாரூர் மாவட்டம்
- தொழிலாளர் துறை உதவி ஆணையர் (பொ) நடராஜன்
திருவாரூர்,டிச.19: திருவாரூர் மாவட்டத்தில் தொழிலாளர் நலவாரித்தில் பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் மற்றும் மருத்துவ முகாம் நாளை (20ந்தேதி) நீடாமங்கலத்தில் நடைபெறவுள்ளதாக தொழிலாளர் உதவி ஆணையர் (பொ) நடராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
திருவாரூர் மாவட்ட கலெக்டரின் உத்தரவுப்படி தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியம், அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியம் மற்றும் அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தாணியங்கி மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியங்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் பணி நிலைமைகளை ஒழுங்குபடுத்தவும், அவர்களுக்கு சமூக பாதுகாப்பு அளித்திடவும் மேற்படி நலவாரியம் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களை உறுப்பினர்களாக பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தல் தொடர்பான சிறப்பு முகாம் நாளை (20ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரையில் நீடாமங்கலம் புனித ஜுட்ஸ் மெட்ரிக் பள்ளியில் நடைபெறவுள்ளது.
மேற்படி வாரியங்களில் உறுப்பினராக பதிவு செய்வதற்கு, வயதுக்கான ஆவணம் (மாற்றுச் சான்றிதழ், ஓட்டுநர் உரிமம், மதிப்பெண் சான்று, பிறப்புச் சான்று), ஆதார் அட்டை (கைப்பேசி எண் இணைக்கப்பட வேண்டும்), குடும்ப அட்டை, தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகம், புகைப்படம், குடும்ப உறுப்பினர்களின் விவரம் மற்றும் அவர்களின் பிறந்த தேதி, அதற்கான ஆவணம் ஆகியவற்றுடன் சிறப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமும் நடைபெறுவதால் இதில் தொழிலாளர்கள் பயன்பெற தங்களது தொழிலாளர் நல வாரிய அட்டை மற்றும் ஆதார் கார்டு ஆகியவற்றுடன் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு தொழிலாளர் உதவி ஆணையர் (பொ) நடராஜன் தெரிவித்துள்ளார்.
