×

தஞ்சை பெரிய கோயில் வளாகத்தில் பக்தர்களை அச்சுறுத்தும் நாய்கள்

தஞ்சாவூர், டிச 19: தஞ்சை பெரிய கோயில் உலக பிரசித்தி பெற்றது. இந்த கோயிலுக்கு தஞ்சை மட்டுமின்றி வெளி மாவட்டம், வெளி மாநிலம், வெளிநாடு உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து பொதுமக்கள் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். மேலும் தஞ்சை பெரிய கோவிலில் பிரதோஷம், சோமவாரம், அன்னாபிஷேகம் உள்ளிட்ட விசேஷ நாட்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதும் இருக்கும். எனவே சாமி வழிபாடு செய்வதற்காக பல்வேறு தரப்பு மக்கள் பெரிய கோயிலுக்கு வருவார்கள்.

இந்த நிலையில் தஞ்சை பெரிய கோவில் நுழைவாயில் மற்றும் வளாகத்தில் தெரு நாய்கள் கூட்டமாக அதிக அளவில் சுற்றி திரிகின்றன. இது பொதுமக்கள் செல்லும் வழியில் படுத்துக்கொள்வதால் கோயில் உள்ளே செல்பவர்களுக்கு இடையூறாக உள்ளது. அதேபோல் கோயில் வளாகத்திலும் நாய்கள் சுற்றி திரிந்து பல்வேறு இடங்களில் அசுத்தம் செய்து வருகிறது. இதனால் கோவிலை சுற்றி வருபவர்கள் முகம் சுளிக்கும் அவல நிலை ஏற்பட்டு வருகிறது. மேலும் மாலை நேரங்களில் நாய்கள் கூட்டம் கூட்டமாக வந்து ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டு கொள்வதால் பொதுமக்களுக்கு அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். எனவே தஞ்சை பெரிய கோயில் பகுதியில் சுற்றி திரியும் நாய்களை பிடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்களும், சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Danjay ,Thanjavur ,Tanjai Grand Temple ,
× RELATED 9 சட்டமன்ற தொகுதியிலும் 20, 21ம் தேதிகளில்...