புதுக்கோட்டை, ஜூன் 13: புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை கற்பிக்கும் தொடக்க நிலை ஆசிரியர்கள் முதல் பருவத்திற்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி தொடங்கியது. பயிற்சி முகாமுக்கு திருவரங்குளம் வட்டார கல்வி அலுவலர் அரங்கநாதன் தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் கவிதா முன்னிலை வகித்தார். முன்னதாக அனைவரையும் வட்டார வள மைய மேற்பார்வையாளர் பொறுப்பு சூரியகாந்தி வரவேற்று பேசினார்.
ஒன்றிய அளவிலான முதல் பருவத்திற்கான எண்ணும், எழுத்தும் பயிற்சிகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் ஆகியோர் வழிகாட்டுதலின்படி முதல் பருவத்திற்கான எண்ணம் எழுத்தும் பயிற்சி துவக்கி வைக்கப்பட்டது. பயற்சியை கருத்தாளர்கள் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் கலந்து கொண்டு வழங்கினர்.
The post திருவரங்குளம் ஒன்றியத்தில் எண்ணும் எழுத்தும் பயிற்சி தொடங்கியது appeared first on Dinakaran.
