×

மக்கள் மசோதா கட்சி சார்பில் தமிழகத்திற்கு கல்வி நிதியை உடனே வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

 

மயிலாடுதுறை, ஜூன் 13: தமிழக மானவ, மாணவிகளின் கல்விக்கு தர வேண்டிய ரூ.2,500 கோடி நிதியை ஒன்றிய அரசு உடனடியாக வழங்க கோரி மக்கள் மசோதா கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக மக்கள் மசோதா கட்சியின் பொது செயலாளர் ரூபன் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கல்வி நிலை இரண்டாம் இடத்தில் உள்ளது என்றும், தமிழகம் கல்வியில் ஐ.ஐ.டி. ஏரோனாட்டிகல், தொல்பொருள் ஆய்வு குடிமை பொருள் தேர்வு என அனைத்து துறையிலும் முன்னே நிற்கிறது. இதை பொறுக்காத ஒன்றிய அரசு, தமிழக மாணவ, மாணவிகளின் கல்வியை பாழாக்க கல்விக்காக தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை வழங்காமல் தமிழகத்தை வஞ்சிக்கிறது என பேசினார். இந்த ஒன்றிய அரசின் கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து 700 பெண்கள் உட்பட, 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் மசோதா கட்சியினர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிர்ப்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

The post மக்கள் மசோதா கட்சி சார்பில் தமிழகத்திற்கு கல்வி நிதியை உடனே வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : People's Bill Party ,Tamil Nadu ,Mayiladuthurai ,Manava ,Union Government ,Mayiladuthurai Head Post Office… ,
× RELATED புழல் சிறைச்சாலையில் வாகனங்கள் ஏலம்