வேதாரண்யம், ஜூன் 13: நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் தமிழக அரசின் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. அரசின் திட்டங்களை மக்கள் எளிதாக பெறுவதை உறுதி செய்யும் பொருட்டு முதலமைச்சரின் உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் உங்களை தேடி உங்கள் ஊரில் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்தமுகாம்களில் அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்ற மக்களிடம் குறைகளை கேட்டு நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
அந்த வகையில் வேதாரண்யம் பகுதியில் மாவட்ட வருவாய் அலுவலர் பவணந்தி தலைமையில் நடைபெற்ற சிறப்பு முகாமில் 40 துறைகளை சார்ந்த அதிகாரிகள் அனைத்து கிராமங்களிலும் ஆய்வு செய்தனர். இது தொடர்பாக வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் கோட்டாட்சியர் திருமால், வட்டாட்சியர் வடிவழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 173 மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுப்பதற்காக உரிய துறைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
The post வேதாரண்யம் உங்களைத் தேடி உங்கள் ஊரில் சிறப்பு முகாம் appeared first on Dinakaran.
