×

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கம்மின்ஸ் வேகத்தில் பம்மியது தென் ஆப்ரிக்கா: 2வது இன்னிங்சிலும் திணறும் ஆஸி.

லண்டன்: ஐசிசி உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் (டபிள்யுடிசி) தொடரின் இறுதி போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஆஸ்திரேலியா- தென் ஆப்ரிக்கா அணிகள் இடையே நேற்று முன்தினம் துவங்கியது. முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி 212 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. அடுத்து ஆட துவங்கிய தென் ஆப்ரிக்கா அணியும் 43 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. நேற்று இரண்டாம் நாள் ஆட்டத்தை கேப்டன் பவுமாவும், பெடிங்காமும் துவக்கினர்.

இருவரும் நிதான ஆட்டத்தை கடைபிடித்து வந்த நிலையில் ஸ்கோர் 94 ஆக இருந்த போது கம்மின்ஸ் பவுமாவை 36 ரன்களில் அவுட் ஆக்கினார். அடுத்து வந்த வெரியனே 13, மார்கோ ஜான்சன் 0, நிதானமாக ஆடிய பெடிங்காம் 45, கேசவ் மகாராஜ் 7, ரபாடா 1 ரன்களில் வெளியேற தென் ஆப்ரிக்கா அணி 138 ரன்களில் ஆல் அவுட்டானது.

ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக கம்மின்ஸ் 6 விக்கெட்டும், ஸ்டார்க் 2, ஹேசல்வுட் 1 விக்கெட்டும் எடுத்தனர். அடுத்து 74 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை துவக்கிய ஆஸ்திரேலிய அணி 23 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 64 ரன் எடுத்திருந்தது. ஹெட் 8 ரன், அலெக்ஸ் கேரி 0 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.

* கம்மின்ஸ் ‘300’
68 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய பேட் கம்மின்ஸ் நேற்று தனது 300வது விக்கெட்டை வீழ்த்தினார். ஆஸ்திரேலிய வீரர்களில் 300 விக்கெட்டுகளை கடந்த 8வது நபர் ஆவார் பேட் கம்மின்ஸ்.

The post உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கம்மின்ஸ் வேகத்தில் பம்மியது தென் ஆப்ரிக்கா: 2வது இன்னிங்சிலும் திணறும் ஆஸி. appeared first on Dinakaran.

Tags : World Test Championship ,South Africa ,Cummins' ,Aussies ,London ,ICC World Test Cricket Championship ,WTC ,Australia ,Lord's ,Dinakaran ,
× RELATED அடிலெய்டில் ஆஸ்திரேலியா அதிரடி: 82...