×

கோபிநாதம்பட்டி கூட்ேராடு ஸ்டாப்பில் விபத்து அபாயம்

அரூர், ஜூன் 13: அரூரில் இருந்து சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், 9வது கி.மீ., தூரத்தில் கோபிநாதம்பட்டி கூட்ரோடு பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு தென்கரைகோட்டை, பொம்மிடி மற்றும் அரூர் செல்லும் இடங்களுக்கான பஸ் நிறுத்தம், வெவ்வேறு இடங்களில் இருந்தபோதும், ஒரே இடத்தில் பஸ்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகின்றனர். மேலும், பயணிகள் பஸ்சில் ஏறச்செல்லும் போது, விபத்து ஏற்படும் நிலையுள்ளது. எனவே, சம்மந்தப்பட்ட நிறுத்தத்தில், பஸ்களை நிறுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கோபிநாதம்பட்டி கூட்ேராடு ஸ்டாப்பில் விபத்து அபாயம் appeared first on Dinakaran.

Tags : Gopinathampatti Kooteradu ,Aroor ,National Highway ,Salem ,Thenkaraikottai ,Bommidi ,
× RELATED நித்திரவிளை அருகே கல்லூரி மாணவி மாயம்