×

குளித்தலை அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை: அனைத்து பாடபிரிவுகளுக்கும் காலி இடங்களுக்கு கலந்தாய்வு

குளித்தலை, ஜூன் 12: கரூர் மாவட்டம், குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கலைக் கல்லூரியில் அனைத்து இளநிலை பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இகுறித்து கல்லூரி முதல்வர் முனைவர் த.சுஜாதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழக அரசு மற்றும் உயர்கல்வித்துறை அறிவித்தலின்படி கடந்த மே 27ம் தேதி வரை இணைய வழியாக விண்ணப்பித்தவர்களுக்கு இளம் அறிவியல் பாடப் பிரிவுகளான (கணிதம், இயற்பியல், வேதியியல், மின்னணுவியல், கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியல் ,உணவு மற்றும் ஊட்டச்சத்துவியல், தாவரவியல் ,விலங்கியல்,) மற்றும் பிகாம், பிபிஏ, பிகாம்(சி.ஏ) மற்றும் பிஏ வரலாறு பி காம் (தமிழ் வழி) பிஏ தமிழ், பிஏ ஆங்கிலம் ஆகிய பாடப் பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களுக்கான கலந்தாய்வு இன சுழற்சி மற்றும் மதிப்பெண் அடிப்படையில் ஜூன் 14ம் தேதி (சனிக்கிழமை) வரை தொடர்ந்து நடைபெறவுள்ளது.

எனவே மே 27 தேதிக்கு முன்பாக விண்ணப்பித்து இதுவரை சேர்க்கை பெறாத மாணவர்கள் இருப்பின் மாணவர்கள் கீழ்க்காணும் ஆவணங்களுடன் நேரடியாக கல்லூரிக்கு வருகை தந்து சேர்க்கை பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது . எடுத்து வரவேண்டிய ஆவணங்கள்: பத்தாம் வகுப்பு, +1 மற்றும் +2மதிப்பெண் சான்றிதழ் ,சாதி சான்றிதழ், மாற்று சான்றிதழ்,போட்டோ (2), வங்கி கணக்கு புத்தக நகல், ஆதார் அட்டை மற்றும் விண்ணப்ப படிவ நகல் மேலும் உரிய கட்டணத்துடன் வருகை தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் கல்லூரியில் செயல்படும் மாணவர் உதவி மையத்திற்கு வருகை தந்து புதிதாக விண்ணப்பித்து பின்னர் நடைபெறவுள்ள கலந்தாய்வு மூலம் கல்லூரியில் சேர்ந்து பயன்பெறலாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.

The post குளித்தலை அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை: அனைத்து பாடபிரிவுகளுக்கும் காலி இடங்களுக்கு கலந்தாய்வு appeared first on Dinakaran.

Tags : Kulithalai Government College ,Kulithalai ,Dr. Kalaignar Government Arts College ,Kulithalai, Karur ,Dr. ,T. Sujatha ,Tamil Nadu government ,
× RELATED தகாத வார்த்தையில் பேசியதாக இளம்பெண் மீது வழக்குப்பதிவு