×

திரௌபதி அம்மன் கோயில் தேரோட்டம்

அரூர், ஜூன் 12: அரூர் அடுத்த வேப்பம்பட்டி, மாம்பாடி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சொந்தமான திரௌபதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் திருவிழாவை, 5ஆண்டுகளுக்கு ஒருமுறை கிராமமக்கள் ஒன்றிணைந்து விமர்சையாக நடத்தி வருகின்றனர். நடப்பாண்டு திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, தினசரி சிறப்பு பூஜைகள் நடந்தது. கடந்த 10ம் தேதி கூழ் ஊற்றி பக்தர்கள் தீமிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர். விழாவின் முக்கிய நாளான நேற்று திரௌபதி அம்மன் தேரோட்டம் நடந்தது. இதில் பள்ளி மாணவர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். இதையடுத்து கிராம மக்கள் ஒன்றிணைந்து திரௌபதி அம்மன் தேரினை ஊர்வலமாக இழுத்து வந்தனர். இந்த திருவிழாவில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டு, வடம் பிடித்து இழுத்து, சாமியை தரிசனம் செய்தனர். விழாவையொட்டி, அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க, 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

The post திரௌபதி அம்மன் கோயில் தேரோட்டம் appeared first on Dinakaran.

Tags : Draupadi Amman Temple Chariot ,Aroor ,Draupadi ,Amman Temple ,Veppampatti ,Mambadi ,Draupadi Amman Temple ,Chariot ,
× RELATED ஓய்வூதியர் தின விழா