×

3ம் சுற்றுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு

தர்மபுரி, ஜூன் 12: தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில், 2025- 2026ம் கல்வி ஆண்டிற்கான 3ம் சுற்றுக்கான மாணவர் சேர்க்கைகான கலந்தாய்வு நாளை (13ம் தேதி) நடக்கிறது. மாணவர்கள் மின்னஞ்சல், குறுஞ்செய்தி வழியாக அழைக்கப்படுவார்கள். தரவரிசைப்படி அழைக்கப்பட்ட அனைவரும், அட்டவணைப்படி கலந்து கொள்ள வேண்டும். பாடப்பிரிவுகள் தமிழ், ஆங்கிலம், கலை, அறிவியல், வணிகவியல் பாடப்பிரிவுக்கு பிசி, பிசிஎம், எஸ்சிஏ பிரிவுகளில் விண்ணப்பித்த அனைத்து மாணவர்களும் பங்கேற்கலாம். பாடப்பிரிவுகள் புள்ளியியல், மின்னணுவியல், சுழற்சி 2ல் கணிதம், இயற்பியல் பாடப்பிரிவுகள், வரலாறு ஆங்கிலம், பொருளியல், அரசியல் அறிவியல், வணிகவியல் கூட்டுறவு பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பித்த எம்பிசி, எஸ்சி, எஸ்டி பிரிவுகளில் விண்ணப்பித்த அனைத்து மாணவர்களும், சுழற்சி 2ல் விண்ணப்பித்த அனைத்து மாணவர்களும் பங்கேற்லாம்.

சேர்க்கைக்கு வரும் மாணவர்கள், 7 ஆவணங்களின் 3 நகல்கள் கொண்டு வர வேண்டும். விண்ணப்பபடிவம், அசல் மாற்றுச்சான்றிதல், அசல் பிளஸ்1 மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல், சாதிச்சான்றிதழ் அசல் மற்றும் நகல், ஆதார் ஆட்டை அசல் மற்றும் நகல், வங்கி கணக்கு புத்தகம் நகல், போட்டோக்கள் (பாஸ்போட் சைஸ்) 4, வருமான சான்றிதழ் கொண்டுவர வேண்டும். மாணவர்களின் சேர்க்கை கட்டணம் கலை மற்றும் வணிகவியல் பாடப்பிரிவுகள் ரூ.3090, அறிவியல் பாடப்பிரிவுகள் ரூ.3,110, பி.காம் (சிஏ), பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ், பிசிஏ பாடப்பிரிவுகள் ரூ.2,210 கட்டணம் செலுத்த வேண்டும். இத்தகவலை கல்லூரி முதல்வர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

The post 3ம் சுற்றுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Dharmapuri Government Arts College ,Dinakaran ,
× RELATED புழல் சிறைச்சாலையில் வாகனங்கள் ஏலம்