×

டூவீலர் விபத்தில் மாணவர் படுகாயம்

வேடசந்தூர், ஜூன் 11: ஆத்தூர் பகுதியை சேர்ந்தவர் நிதீஷ் குமார் (20). பஞ்சாப் மாநிலத்தில் சிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகிறார். விடுமுறையில் ஊருக்கு வந்துள்ள நிதீஷ் நாமக்கல்லில் வேலை பார்க்கும் அவரது தாயாரை பார்த்து விட்டு மீண்டும் திண்டுக்கல் நோக்கி நேற்று டூவீலரில் வந்துள்ளார்.

கரூர்- திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் கல்வார்பட்டி சோதனைச் சாவடி அருகே வந்த போது எதிரே ராங் ரூட்டில் வந்த திண்டுக்கல்லை சேர்ந்த பூபதி (51) ஓட்டி வந்த கார் இவரது டூவீலர் மீது மோதியது. இதில் டூவீலரிலிருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த நிதீஷ் குமாரை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக வேடசந்தூர் ஜிஹெச்சிற்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கூம்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post டூவீலர் விபத்தில் மாணவர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Vedasandur ,Nitish Kumar ,Attur ,Punjab ,Nitish ,Namakkal ,Dindigul… ,Dinakaran ,
× RELATED புழல் சிறைச்சாலையில் வாகனங்கள் ஏலம்