×

நேஷன்ஸ் லீக் கால்பந்து போர்ச்சுக்கல் 2வது முறையாக சாம்பியன்

பெர்லின்: ஐரோப்பிய கால்பந்து அணிகளுக்கான நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடர் நடைபெற்றது. இதில் மொத்தம் 54 அணிகள் பங்கேற்றன. லீக் மற்றும் நாக்அவுட் சுற்றை தொடர்ந்து அரையிறுதியில் போர்ச்சுக்கல், ஜெர்மனியையும், ஸ்பெயின் பிரான்சையும் வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது. தொடர்ந்து ஜெர்மனியின் பெர்லின் நகரில் இன்று அதிகாலை நடந்த பைனலில் போர்ச்சுக்கல்-ஸ்பெயின் மோதின.

விறுவிறுப்புடன் தொடங்கிய இந்த போட்டியில் ஸ்பெயினின் மார்ட்டின் ஜூபிமெண்டி 21வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதற்கு பதிலடியாக போர்ச்சுக்கல்லின் நுனோ மென்டிஸ் கோல் அடிக்க 1-1 என சமநிலை ஏற்பட்டது. தொடர்ந்து 45வது நிமிடத்தில் ஸ்பெயினின் மைக்கேல் ஓயர்சபால் கோல் அடிக்க 2-1 என அந்த அணி முன்னிலை பெற்றது. 2வது பாதியில் ஆட்டத்தின் 61வது நிமிடத்தில் போர்ச்சுக்கல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடித்து சமன் செய்தார். இது அவருக்கு 938வது சர்வதேச கோலாகும்.

தொடர்ந்து ஆட்டத்தின் கடைசி நிமிடம் வரை கோல் எதுவும் அடிக்கப்படாததால் 2-2 என ஆட்டம் சமனில் முடிந்தது. கூடுதலாக இருமுறை 15 நிமிடங்கள் வழங்கப்பட்ட போதிலும் கோல் எதுவும் விழவில்லை. இதையடுத்து வெற்றியை தீர்மானிக்க பெனால்டி ஷூட் முறை கொண்டு வரப்பட்டது. இதில் 5-3 என்ற கோல் கணக்கில் போர்ச்சுக்கல் வெற்றி பெற்று 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இதற்கு முன் அந்த அணி 2019ல் பட்டம் வென்றிருந்தது.

The post நேஷன்ஸ் லீக் கால்பந்து போர்ச்சுக்கல் 2வது முறையாக சாம்பியன் appeared first on Dinakaran.

Tags : Portugal ,Nations League football ,Berlin ,Nations League ,Germany ,Spain ,France ,Berlin, Germany ,Nations League Soccer ,Dinakaran ,
× RELATED அடிலெய்டில் ஆஸ்திரேலியா அதிரடி: 82...