லண்டன்: இங்கிலாந்தை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீரர் ஜேக் டிரேப்பர், ஏடிபி தரவரிசையில் 10ம் இடம் வகிக்கிறார். வரும் ஜனவரி 12ம் தேதி துவங்கவுள்ள ஆஸ்திரேலியன் ஓபன் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் அவர் ஆடுவார் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், ஜேக் டிரேப்பருக்கு ஏற்பட்டுள்ள காயம் காரணமாக ஆஸ்திரேலியன் ஓபன் போட்டியில் தன்னால் ஆட முடியாது என டிரேப்பர் தற்போது அறிவித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியின்போது, இடது கையில் ஏற்பட்ட காயத்தால் 2வது சுற்றிலேயே அவர் வெளியேற நேரிட்டது குறிப்பிடத்தக்கது.
