×

மதுரை – தூத்துக்குடி சாலையில் 2 சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க தடையில்லை: உச்சநீதிமன்றம்

டெல்லி: மதுரை தூத்துக்குடி சாலையில் 2 சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க தடையில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அருப்புக்கோட்டை அருகேயுள்ள எலியார்பத்தி என்னும் இடத்தில் அமைந்துள்ள சுங்கச் சாவடியில் கடந்த 2011-ஆம் ஆண்டுமுதல் எந்த பராமரிப்புப் பணியும் செய்யப்படவில்லை. இதனால் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளன. பேருந்துகள் அடிக்கடி பழுதாகின்றன. மேலும், அடிக்கடி விபத்துகளும் நிகழ்கின்றன.

இதனையடுத்து, சேதமடைந்துள்ள சாலையை முழுமையாகச் சீரமைக்கும் வரை எலியார்பத்தியிலும் புதூர் பாண்டியபுரத்திலும் உள்ள சுங்கச் சாவடிகளில் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க இடைக்காலத் தடை விதிக்கவேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் செய்யப்பட்டுள்ள பணிகள் குறித்து அறிக்கை அளிக்க ஆணையிட்டுள்ளதுடன், எலியார்பத்தி சுங்கச் சாவடி, புதூர் பாண்டியபுரம் சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் சுங்கக் கட்டணம் வசூலிக்க ஐகோர்ட் விதித்திருந்த தடையை நீக்கியது.

 

The post மதுரை – தூத்துக்குடி சாலையில் 2 சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க தடையில்லை: உச்சநீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : Madurai ,Thoothukudi road ,Supreme Court ,Delhi ,Madurai Thoothukudi Road ,Eliarpatti ,Aruppukkottai ,Dinakaran ,
× RELATED வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி திருச்சி...